• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துப்பாக்கியுடன் சிரிக்கும் வில்லி ஆண்ட்ரியா.. மாஸ் காட்டும் கவின் - மாஸ்க் பர்ஸ்ட் லுக்!

சினிமா

பிரபல தொலைக்காட்சி சீரியலான சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் கவின். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் திரைப்படங்களில் தீவிரமாக களமிறங்கிய கவினுக்கு லிஃப்ட், டாடா ஆகியவை வெற்றிப் படங்களாக அமைந்தன. இதனால் கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

அடுத்து வெளியான ஸ்டார் படம் சற்று சொதப்பினாலும் பிச்சைக்காரனாக கவின் நடித்த ப்ளடி பெக்கர் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. தொடர்ந்து நடன இயக்குநரான சதிஷ் இயக்கத்தில் உருவாகும் 'கிஸ்' என்ற படத்தில் கவின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவினின் 6 - வது திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பில் அறிமுக இயக்குநரான விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

நடிகை ஆண்டிரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று (பிப்ரவரி 26) காலை 10.30 மணிக்கு படக்குழு அறிவித்தபடி வெளியிட்டுள்ளது. 
 

Leave a Reply