
வற்றாப்பளையில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்பு
இலங்கை
முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இன்று அப்பகுதியிலுள்ள நீர் நிலை ஒன்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
குறித்த சிறுவனின் மரணம் கொலையா அல்லது , விபத்தா என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.