• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்

இலங்கை

2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏர்பஸ் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் துறையிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய விமானங்களை மாற்றும் போது நடந்ததாகக் கூறப்படும் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வாக்குமூலம் பதிவு வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பொது நிறுவன மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தை விசாரித்து வருகிறது.

இதற்கிடையில், ஜே.வி.பி உறுப்பினர்களின் சில அறிக்கைகள்இ நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply