• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேசிய மகளிர் வாரம் பிரகடனம்

இலங்கை

இம்முறை சர்வதேச மகளிர் தினமானது ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.

அந்தவகையில் நிலையான எதிர்காலத்தை அமைக்க – வலிமைமிக்க அவளே முன்னோக்கிய வழி’ என்பதை பிரதான கருப்பொருளாக கொண்டு மார்ச் 2ம் திகதியிலிருந்து மார்ச் 8ம் திகதி வரை தேசிய மகளிர் வாரத்தை பிரகடனப்படுத்தி சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டங்கள் உள்ளடங்களாக தேசிய, மாகாண,மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கென துறைசார் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் 1977ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று முதல் இன்று வரை ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் அனைத்திலும் மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply