
5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்...
சினிமா
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது. சமீபகாலமாக பெரிய ஹிட் படங்களை கண்டுவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்துள்ளது.
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவன் டிராகன், வாழ்க்கையில் குறுக்கு வழியில் முன்னேற நினைத்து செய்யும் தவறுகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சுவாரஸ்யமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லும் கதையே டிராகன்.
கல்லூரி கதைக்களத்தில் படம் என்பதால் இளைஞர்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
விமர்சன ரீதியாக பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வர பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டி வருகிறது படம்.
5 நாள் முடிவில் படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 35 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.