• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மருத்துவமனையில் போப் பிரான்சிஸ்.. மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை!

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் (88) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை மெல்ல தேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி ஆயிரக்கணக்கானோர் பிராரத்தனை செய்த சம்பவம் வாடிகனில் அரங்கேறியது. அதன்படி வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே ஒன்று கூடிய மக்கள் போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

சுமார் 45 நிமிடங்கள் பிரார்த்தனை நடைபெற்ற நிலையில், பொது மக்கள் மழை மற்றும் குளிர்ந்த வானிலையை கூட பொருட்படுத்தாமல் கைகளில் ஜெபமாலையை எண்ணியவாரு பிரார்த்தனை செய்தனர்.

88 வயதான போப் பிரான்சிஸ் நிமோனியா மற்றும் சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்ய ஒன்று கூடிய நிலையில், மழை பெய்த போதிலும் அவர்கள் குடைகளை விரித்து அங்கேயே நின்று கொண்டு பிராத்தனையை தொடர்ந்தனர்.

Leave a Reply