• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு

இலங்கை

நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 2,295 குடும்பங்களைச் சேர்ந்த 7,258 பேர் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் வெலிகேபொல, எஹலியகொட, மற்றும் கலவானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலும் வசிக்கும் மக்களுமே குடிநீர் தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் வறட்சியான காலநிலையால் நாடு முழுவதும் உள்ள 12 மாவட்டங்களில் 49 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றுக்கு மனித செயற்பாடுகளும் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் காட்டுத் தீயினால் தாவரங்கள் மற்றும் விலங்குகள் இரண்டும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளன.

அதேநேரம், தீ விபத்துக்கு காரணமானவர்கள் பெறுப்பு கூற வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பான எந்த தகவலையும் வழங்க பொதுமக்கள் முன்வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 

Leave a Reply