
நாமலின் உயிருக்கு அச்சுறுத்தல் - சாகர காரியவசம்
இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவை அரசாங்கம் “குழிக்கு” அனுப்பும் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டி பேசும் போதே சாகர காரியவசம் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த அறிக்கை குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்திய SLPP பொதுச்செயலாளர், இது நாமல் ராஜபகசவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலைக் குறிக்கிறது.
நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதால், அவருக்கு தீங்கு விளைவிக்க அரசாங்கம் சதி செய்து வருகின்றது.
இதுபோன்ற செயல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வலியுறுத்திய அவர், நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளை வலியுறுத்தினார்.