• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் கலிப்சோ

இலங்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ ரயில், கடந்த 17 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியதாகவும், அன்றைய தினம் மாத்திரம் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துட்டுமல்லாது பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி நாளாந்தம் பயணிக்கும் குறித்த  கலிப்சோ ரயில், நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வரை  வருமானம் ஈட்டிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால்,  சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி  தெம்மோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் ரயில் நிறுத்தப்படும் என்று ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டுவதோடு சிறந்த சேவையையும் வழங்க ரயில்வே திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply