• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவின் ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர் திரு Mike Amesbury அவர்களுக்கு சிறைதண்டனை 

பிரித்தானியாவின் ஆளும் கட்சி பாராளமன்ற உறுப்பினர் திரு Mike Amesbury அவர்களுக்கு இன்று 10 வாரங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு ஐப்பசி மாதம், திரு Mike Amesbury அவர்கள் தனது Cheshire தொகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகியதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது
இவ் சம்பவத்தை தொடர்ந்து அவரை அவருடைய தொழிலாளார் கட்சியும் இடைநிறுத்தியிருந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய வழக்கின் போது திரு Mike Amesbury அவர்களின் சட்டத்தரணி குறித்த பொதுமகனின் நடவடிக்கைகள் பாராளமன்ற உறுப்பினரை புண்படுத்தியதால் தான் பாராளமன்ற உறுப்பினர் அவரை தாக்கியதாக வாதிட்டார்
குறிப்பாக வெறும் தற்பாதுகாப்புக்காக (Self Defense) மட்டுமே குறிப்பிட்ட பொதுமகனை தாக்கியதாகவும் வாதங்களை முன்வைத்தார்
அதே போல பொதுவாழ்க்கையில் அவருக்கு நிறைய அச்சுறுத்தல்கள் இருந்ததாக அவரின் சட்டத்தரணி குறிப்பிட்டார்
ஆனால் நீதிமன்றம் குறித்த வாதங்களை நிராகரித்து விட்டது.பொது மகன் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என அறிவுறுத்தி அவரை உடனடியாக சிறையிலடைக்க உத்தரவிட்டு இருக்கின்றது
விசேடமாக குறித்த வழக்கில் நீதிபதி பாராளமன்ற உறுப்பினரின் சட்டத்தரணியிடம் “Are you suggesting I should deal with your client differently?” என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்
திரு Mike Amesbury ஒரு பாராளமன்ற உறுப்பினராக பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்
இதற்கிடையில் திரு Mike Amesbury தன்னுடைய பாராளமன்ற ஆசனத்தையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது (The custodial sentence could trigger a recall petition under the Recall of MPs Act 2015)
சமகாலத்தில் இலங்கையில் யாழ்ப்பாண பொது மக்கள் தெரிவு செய்த அதி புத்திசாலி பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சனா இராமநாதன் பொதுமகன் ஒருவரை ஹோட்டல் ஒன்றில் தாக்கி இரத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பதிவாகிய போது பொலிஸ் அதிகாரிகள் எந்த நடவடிக்கையுமின்றி இருவரையும் சமரசம் செய்து வைத்தார்கள்
அதே பாராளமன்ற உறுப்பினர் பொதுவெளியில் மிக மோசமாக ஜேவிபி அமைச்சர் திரு சந்திரசேகர் அவர்களின் சமூக பின்னணியை கொச்சையாக வசைபாடிய போது அது கடும் தண்டனைக்குரிய குற்ற செயலாகவிருந்த போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
அதே நபர் சைவ சமய பிரமுகர் திரு ஜெயராஜ் அவர்களை மிக மிக ஆபாசமாகவும் கொச்சையாகவும் பொதுவெளியில் பகிரங்கமாக திட்டிய போதும் நடவடிக்கை எடுக்கவில்லை

அரச நிறுவனமான போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி பிரவேசித்து குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் அவர்கள் மீது Unparliamentary words உபயோகித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை
தன்னோடு பணியாற்றிய பெண் மருத்துவ அதிகாரி ஒருவர் தாய்மை அடைந்தது தொடர்பாக பொதுவெளியில் ஆபாசமாக கருத்துக்களை வெளியிட்ட போதும் நடவடிக்கை எடுக்கவில்லை
யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விநயோகம் செய்கின்றது என பொதுவெளியில் எழுந்தமானமாக ஆதாரமற்ற கருத்துக்களை பகிர்ந்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை
Money laundering தொடர்பான சட்டங்கள் அமுலில் உள்ள போதும் குறித்த பாராளமன்ற உறுப்பினரின் பண பரிவர்த்தனைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை
அதே நபர் தன்னுடைய கருத்துக்கு மாறான நிலைப்பாடு கொண்டவர்களின் குடும்ப பெண்களின் படங்களை சித்தரித்து பகிர்ந்த பொதும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை
அரசாங்க அதிகாரிகள் முதல் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் வரை பலருக்கும் அவர்கள் கடமைகளை நிறைவேற்ற தடைகளை ஏற்படுத்திய போதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்புகளால் வெவேறு தளங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதும் எந்த நடவடிக்கையும் இல்லை
கடந்த கால ஆட்சியாளர்கள் பிள்ளையான் முதல் அருண் சித்தார்த் வரையான நபர்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்தியது போல ஜேவிபி ஆட்சியாளர்கள் அர்ச்சனா இராமநாதன் என்கின்ற குற்றபின்னணி நபரை தங்கள் தேவைக்கு பயன்படுத்த பாதுகாக்கின்றார்கள்
குறிப்பாக தமிழ் மக்கள் சார்ந்த Sensitive விடயங்களை குதர்க்கமாகவும் முரண்பாடாகவும் பேசி பொது கவனத்தை திசை திருப்ப மேற்படி நபரை பயன்படுத்துகின்றார்கள்
 

 

Leave a Reply