
லிஜோமோல் - லாஸ்லியா நடித்த ஜென்டில்வுமன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
சினிமா
கோமலா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசியன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன்.
இந்த திரைப்படம் சமூகத்தில் குடும்ப அமைப்பில் பெண்களின் பங்களிப்பை கேள்வி கேட்கும், சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.
இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருக்கிறது. டிரெய்லரை மலையாள பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பேசில் ஜோசஃப் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளார்.