
மீனகயாவால் பறிபோன யானைகளின் எண்ணிக்கை உயர்வு
இலங்கை
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான ரயில் பாதையில் மீனகயா கடுகதி ரயிலில் மோதி படுகாயமடைந்த மற்றுமொரு காட்டு யானைக் குட்டி உயிரிழந்துள்ளது.
அதன்படி, ரயில் விபத்தில் உயிரிழந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை 7 ஆகும்.
கடந்த 19 ஆம் திகதி இரவு 11.20 மணியளவில், மீனகயா கடுகதி ரயிலில் மோதிய ஏழு காட்டு யானைகளில் 6 யானைகள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடப்பட்டது.