• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புஷ்பா 2 படத்தில் புடவை அணிந்து நடிக்க முதலில் பயந்தேன் - மனம் திறந்த அல்லு அர்ஜுன்

சினிமா

இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா 2 தி ரூல்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார்.

பான் இந்தியா வெளியீடாகத் தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'புஷ்பா 2' முதல் நாள் வசூலாக 294 கோடி ரூபாய் வசூல் செய்தது, இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாள் வசூலித்தது இப்படத்தின் வசூலே அதிகமாகும்.

இந்தியாவில் வெளியான படங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படமாக புஷ்பா 2 உருவெடுத்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் ரூ. 1871 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் புடவை அணிந்து நடித்த ஜாதரா காட்சியில் நடிக்க பயந்ததாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இயக்குநர் சுகுமார் முதலில் ஜாதரா காட்சி பற்றி என்னிடம் கூறியபோது , நான் மிகவும் பயந்தேன். 'நீங்கள் ஒரு பெண்ணை போலவே புடவை அணிய வேண்டும்' என்று அவர் கூறியபோது பயமாக இருந்தது. அனால் பின்னர் அதை படமாக்கி விட்டோம்" என்று தெரிவித்தார்.
 

Leave a Reply