
களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய பொங்கல் விழா
இலங்கை
களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார அம்சங்களை மங்கி மறையாமல் பிரதிபலிக்கும் பொங்கல் விழா மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (21.02.2025) மிகவும் விமர்சையாக நடைபெற்றது. நிகழ்வுகள் வித்தியாலய முதல்வர் திரு.சபேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் நெற்கதிர்கள்,பண்பாட்டுப் பவனி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு களுவாஞ்சிகுடி மட் /பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசியப் பாடசாலையை சென்றடைந்தது. அங்கு கொண்டு சென்ற நெற்கதிர்கள் அடிக்கப்பட்டு புத்தரிசி குற்றி புதுப்பானையில் இட்டு பொங்கல் வழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது தமிழ் தாய் வாழ்த்து, இசைவாத்திய ஆற்றுகை, கிராமியநடனம், நாட்டார் நடனம், கழவர் நடனம், ஒயிலாட்டம், நாட்டார் பாடல், கவியரங்கம், தமிழர் பெருமையை பறைசாற்றும் பல்வேறு கிராமிய நிகழ்வுகள் என்பன ஆற்றுகை செய்யப்பட்டது.
இதன்போது பாடசாலை ஆசிரியர்கள் , கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் , பொதுமக்கள், கலைஞர்கள், உள்ளிட்ட பலரும் பற்கேற்றிருந்தனர்.
இதன்போது மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பல நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.