• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்க டெல்டா விமான விபத்து - பயணிகளுக்கு $30,000 இழப்பீடு

டொராண்டோ விமான நிலையத்தில் இந்த வாரம் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான டெல்டா விமானத்தில் பயணித்த ஒவ்வொரு பயணிக்கும் $30,000 வழங்குவதாக அமெரிக்க விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும், பயணிகள் தங்களுக்கான இழப்பீடுகளை எவ்வாறு கோரலாம் என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தில் பயணித்த 76 பயணிகளும் டெல்டாவிடம் இருந்து அறிவிக்கப்பட்டுள்ள சலுகையைப் பெற்றால், அது விமான நிறுவனத்துக்கு மொத்தம் $2.3 மில்லியனுக்கும் மேலான செலவாக அமையும்.

கடந்த திங்களன்று (19) அமெரிக்காவின் மினியாபோலிஸ், மினசோட்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம், டொராண்டோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிரங்கும் போது, ஓடுபாதையில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது, விமாணத்தில் 76 பயணிகளும், நான்கு பணியாளர்களும் இருந்தனர்.

விபத்தில் உயிரிழப்புகள் எவையும் பதிவாகவில்லை, எனினும், 21 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

புதன்கிழமை காலை நிலவரப்படி ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் தற்சமயம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டெல்டா தெரிவித்துள்ளது.
 

Leave a Reply