
மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சினிமா
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இன்று வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியீட்டுக்கு முன்பே டிராகன் திரைப்படத்தின் ஓ.டி.டி. மற்றும் இதர உரிமங்கள் விற்கப்பட்டு விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. மேலும், இந்தப் படம் திரையரங்கு வெளியீட்டில் பெரும் வசூல் முழுவதும் நிறுவனத்திற்கு போனஸ் தான் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில், பட ரிலீசை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த டிராகன் படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப்போகும் புதிய படம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். இந்தப் படம் அவர் இயக்க இருக்கும் சிம்புவின் 51-வது (எஸ்.டி.ஆர். 51) படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து மீண்டும் படம் இயக்குவதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
எஸ்.டி.ஆர். 51 படத்தைத் தொடர்ந்து தான் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பார் என்றும் இந்தப் படத்தையும் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் என்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். 2027-ம் ஆண்டு வாக்கில் இந்தப் படம் அமையும் என்றும் அப்போது பிரதீப் ரங்கநாதனின் கால்ஷீட் கிடைப்பதை பொருத்து அதன் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.