
டிராகன் படத்தின் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி
சினிமா
அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ள படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ள இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் பிரபல இயக்குநர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மரியம் ஜார்ஜ், சித்ரா மற்றும் வி.ஜே. சித்து, ஹர்ஷத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'டிராகன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அனுமதி வழங்கியுள்ளது. இதனால் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'டிராகன்' படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கி உள்ளது. மேலும் இந்தப் படத்தின் ரன்-டைம் 2 மணி 35 நிமிடங்கள் ஆகும்.
பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படம் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.