
மீத்தெனிய துப்பாக்கி சூடு - உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
இலங்கை
மீத்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் சமப்வ இடத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (18) இரவு 10.15 மணியளவில் தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் சாரதியான கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது 06 வயதுடைய மகள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்பது வயதுடைய பாதிக்கப்பட்டவரின் மகனும் நேற்று மாலை உயிரழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணையையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.