• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து அரச நிறுவனங்களில் விசேட பிரிவு

இலங்கை

பயனுள்ள பொது சேவைகளை உறுதி செய்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழலைத் தடுப்பது, அரசாங்க நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாடு கலாச்சாரத்தை வளர்ப்பது, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல், நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துதல், சட்ட அமலாக்கத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்துடன் (CIABOC) ஒத்துழைப்பது இந்த பிரிவை நிறுவுவதன் முதன்மை நோக்கமாகும்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக அலுவல்கள் பிரிவை விசேட பிரிவாக அமைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

முதற்கட்டமாக, அனைத்து அமைச்சரவை அமைச்சுக்கள், மாகாண பிரதம செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இது நிறுவப்படும்.

மேலும், இந்த உள்ளக அலுவல்கள் பிரிவுகளை ஸ்தாபிப்பது தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்துமூலம் பணிப்புரை விடுத்துள்ளார்.
 

Leave a Reply