
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்
இலங்கை
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்றைய தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ’ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டில் தலைமறைவாக வாழும் குற்ற கும்பலைச் சேர்ந்த மூவருக்குத் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டுபாய் மற்றும் பிரான்ஸில் தலைமறைவாக உள்ள குற்ற கும்பலை சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, பட்டுவத்தே சாமர மற்றும் ஜூட் பிரியந்த ஆகியோரே குறித்த கொலை சம்பவத்திற்கு திட்டம் தீட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் மிகவும் பலம் பொருந்திய பாதுகாப்பான இடமான நீதிமன்ற வளாகத்தில் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளமை நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, நீதித்துறை ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.