
டொரன்டோவில் அதிகரிக்கப்பட உள்ள வரி
கனடா
கனடாவின் டொரன்டோ நகரில் வரி அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
டொரன்டோ நகர முதல்வர் ஒலிவியா சௌ தாக்கல் செய்த வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படியே வரி வீதமானது 6.9 வீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் எவ்வித நிறைவேற்றப்பட்டுள்ளது.
சொத்து வரி இவ்வாறு 6.9 வீதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர முதல்வராக பங்கேற்றதன் பின்னர் சொள சமர்ப்பித்த இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.