
கனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கில் ஒருவர் பலி
கனடா
பிரிட்டிஷ் கொலம்பியா - அல்பெர்டா எல்லைக்கு அருகே உள்ள ராக்கி மலைப்பகுதியில் நடந்த பனிப்பாறைச் சரிவில் 42 வயது ஆண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கப்ரிஸ்டோ மலையில் இடம்பெற்றுள்ளது.
பனிச்சரிவு குறித்த கனடிய நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவான தகவலின்படி, இந்த பனிச்சரிவு "அளவு 2, காற்றால் உருவான பனிச்சரிவு" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2,280 மீட்டர் உயரத்தில் ஏற்பட்டுள்ளது.
பனிச்சரிவுகளின் அளவு 1 முதல் 5 வரை வகைப்படுத்தப்பட்டாலும், அளவு 2 என்றால் கூட ஒருவர் புதையவோ, காயமடையவோ, உயிரிழக்கவோ போதுமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபர் 120 சென்றி மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.