• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வீடுகள் விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

கனடா

கனடாவில் வீடுகளின் விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய வீட்டு மனை ஒன்றியம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வீடுகளின் விற்பனையானது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 3 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வீடுகளின் விற்பனை ஜனவரி மாதத்தில் 2.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

வரி விதிப்பு வட்டி வீதம் போன்ற காரணிகளின் அடிப்படையில் வீடுகளின் விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வீடுகள் விற்பனை தொடர்பான பட்டியலுக்கு சேர்க்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 11 வீதத்தினால் அதிகரித்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 
 

Leave a Reply