• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா விமான விபத்தில் சிக்கியோருக்கு வழங்கப்படும் நட்டஈடு

கனடா

கனடாவின் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் சிக்கியோருக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

Flight 4819 விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு $30,000 இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. டெல்டா விமான சேவை நிறுவனம் இந்த நட்டஈட்டுத் தொகையை அறிவித்துள்ளது.

இந்த தொகை பயணிகளின் உரிமைகளுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இது ஒரு ஆதரவு நடவடிக்கையாக மட்டுமே வழங்கப்படுகிறது” என விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டொரொண்டோவிலுள்ள ஒரு சட்ட நிறுவனம், விபத்தில் காயமடைந்த இரண்டு பயணிகளை சார்பாக வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (TSB) அதன் விசாரணை தொடர்பாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

விசாரணை இன்னும் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தை ஓடுதளத்திலிருந்து அகற்றும் பணி தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 

Leave a Reply