• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகையின் காலை தொட்டு வணங்கிய நடிகை ஜோதிகா.. 

சினிமா

டோலி சஜா கே ரக்னா என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. தமிழில் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார்.

பின் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

திருமணம், குழந்தைகள் என சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது, டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ஜோதிகா, நடிகை ஷபானா ஆஸ்மியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  


 

Leave a Reply