
த.வெ.க. தலைவர் விஜயுடன் உரையாடியதாக கனவு கண்டேன் - நடிகர் பார்த்திபன்
சினிமா
நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய த.வெ.க. தலைவருமான விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல், பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால் …..
அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ?
ஆனா சத்தியமா வந்தது.
கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள் …இப்படி சில பல! காரணமாக இருக்கலாம்.