
பில் கேட்ஸ் - ரன்பீர் கபூர்.. யாருடன் டின்னர் சாப்பிடுவீர்கள் - நீடா அம்பானி கொடுத்த பளிச் பதில்
சினிமா
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 2025 இந்திய மாநாட்டில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி கலந்துகொண்டார்.
அப்போது நடந்த கலந்துரையாடலில் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது உலக பணக்காரர் பில் கேட்ஸ் அல்லது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ஆகிய இருவரில் யாருடன் இரவு உணவு சாப்பிடுவீர்கள்? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீடா அம்பானி, "ரன்பீர், ஏனென்றால் என் மகன் ஆகாஷ் மிகவும் சந்தோஷப் படுவான்- ரன்வீர் ஆகாஷின் சிறந்த நண்பர்" என்று பதில் அளித்தார்.
இதற்கு முன்னதாக கணவர் முகேஷ் அம்பானி அல்லது பிரதமர் மோடி, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீடா, மோடி நாட்டுக்கு சிறந்தவர், முகேஷ் வீட்டுக்கு சிறந்தவர் என முத்தாய்ப்பாகப் பதில் கொடுத்தார்.