
கனேமுல்ல சஞ்சீவ கொலையும் பாதாள உலக அரசியலும்
நான் பத்திரிகையில் இணைந்தபோது எனக்கு அதிக நாட்டம் க்ரைம் "செய்திகளை தேடித் தேடி எழுதுவது ஒரு காலத்தில் இந்த க்ரைம் செய்திகளை வாசிக்கத்தான் அதிக வாசகர்கள் இருப்பார்கள். ஆனால் நம் நாட்டில் இந்த செய்திகளை தேடி எழுதவேண்டுமென்றால் சிங்கள மொழி கட்டாயமாக தெரியவேண்டும். கொழும்பில் பாதாள உலக நபர்களின் அதி உச்சப்பகுதியாக மாளிகாவத்த, வாழைத்தோட்டம், பொரளை, தமிழ்நாடு, கிராண்ட்பாஸ் மற்றும் தொட்டலங்க. பாதாள உலக கோஸ்டிகளால் கொழும்பில் உயர் நீதிமன்ற நீதிபதி கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்துள்ளதுள்ளது. இந்த பாதாள உலக கும்பல்களின் பின்னணியில் முக்கியமாக இருப்பது போதைப்பொருள் வியாபாரமாகும். இதில் எல்லா இனத்தவர்களும் எந்தவித பேதங்களும் இன்றி செயலாற்றுவார்கள். கொழும்பு சுற்றுவட்டாரத்தில் அதிகமானவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களும்தான் அந்தக்காலத்தில் இருந்தார்கள் அவர்களில் அநேகமானோர் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்ட மோதல்களில் துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகி மரணித்துள்ளனர் கொம்பனித்தெரு டேழு என்ற தமிழர்தான் முன்னர் மிக பிரபல்யமானவர் அவர் பயணிக்கும் வாகனத்துக்கு முன்னாலும் பின்னாலும் ஐந்து வாகனங்கள் பயணிக்கும் அந்தளவுக்கு அரச செல்வாக்கு. கொழும்பில் இந்த பாதாள கும்பல்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது ஐதேக அரசுதான். பின்னர் இந்த பாதாள உலகு முற்றுமுழுதாக இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்களின் கைகளுக்கு கைமாறியது. அவர்கள் இராணுவத்திலிருந்து களவாடிய துப்பாக்கிகளுக்கு அப்பால் தமிழ் இயக்க உறுப்பினர்களிடமிருந்தும் கைமாறியது. பணம் காரணமாக அரச பாதுகாப்பு மட்டத்திலிருந்தும் இவர்களுக்கு தகவல்கள் பரிமாறப்படுகின்றது. இன்று நீதிமன்றத்துக்குள் நிகழ்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலை என்பது முன் கூட்டியே கொலையாளிக்கு துல்லியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கேற்றவகையில் அவரின் கொலை அரங்கேறியுள்ளது. பாதாள உலக கும்பல்களை உடனடியாக துடைத்தெறிவது என்பது இயலாத காரியமாகும். இன்று சர்வதேச போதைப்பொருள் விறபனையாளர்களோடு அது பின்னிப்பிணைந்துள்ளது. என்பதே உண்மை.
வரதன் கிருஸ்ணா