
சூர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்கும் தண்டேல் இயக்குநர்
சினிமா
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இணைந்து நடித்துள்ள 'தண்டேல்' என்ற படத்தை இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். இப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியான 8 நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
இந்நிலையில் சூர்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தண்டேல் இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகர் சூர்யாவிடம் இயக்குநர் சந்து மொண்டேட்டி பேசியுள்ளார்.
சூர்யாவை சந்தித்தது குறித்து பேசிய சந்து மொண்டேட்டி, "இது வாழ்க்கையைவிட பெரிய கதை. சூர்யா போன்ற நடிகர்கள் மட்டுமே இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். விரைவில் திரைப்படத்தின் பணிகள் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
சூர்யா தற்பொழுது ஆர்.ஜே பாலாஜி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் . திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.