
தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தல்
இலங்கை
இந்தியாவில் நேற்று (18) கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரரான‘ஹரகா கட்டா’ என்று அழைக்கப்படும் நடுன் சிந்தகவின் தப்பிக்கும் முயற்சிக்கு உதவியதாகக் கூறப்படும் கான்ஸ்டபிள் ரவிந்து சந்தீபவும் இன்று இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இரண்டு சந்தேக நபர்களில் அடங்குவார்.
இலங்கை பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய சர்வதேச பொலிஸ் சேவையான இண்டர்போல் சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்து அவர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்களில் இருவர் இன்று பிற்பகல் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.