• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Womens Premier League போட்டியில் இருந்து சமரி அத்தபத்து விலகல்

இலங்கை

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தற்போது பங்கேற்று வரும் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து இறுதி கட்டத்திற்கு முன்பே போட்டிகளில் இருந்து விலகவுள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் இவர் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி மார்ச் 4 ஆம் திகதி நடைபெற உள்ளது அதற்கு முன் இலங்கை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடும்.

அதன்படி,  தற்போது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வந்துள்ள இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து, போட்டியின் இறுதி கட்டத்திற்கு முன்பு அணியை விட்டு வெளியேறவுள்ளார். வாரியர்ஸ் அணியைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் சமரி அத்தபத்து  குறித்த அணியிலிருந்து வெளியேறி பெப்ரவரி 26 ஆம் திகதி இலங்கை அணியுடன் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகளிர் அணி பெப்ரவரி 22 ஆம் திகதி நியூசிலாந்துக்குப் புறப்பட்டு, பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இரண்டு பயிற்சிப் போட்டிகளில் பங்கேற்கும். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மார்ச் 4 ஆம் திகதியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் மார்ச் 7 மற்றும் 9 ஆம் திகதிகளிலும் நடைபெறும்.

அத்துடன் இருபதுக்கு 20 போட்டிகள் மார்ச் 14,16 மற்றும் 18 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply