
கூலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் நடிகை..
சினிமா
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் 70 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது என ரஜினியே சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்து இருந்தார்.
இந்நிலையில் விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் படத்தில் வந்த காவாலா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது போல இந்த படத்திலும் ஒரு சிறப்பு பாடலை இயக்குனர் லோகேஷ் எடுக்க போகிறாராம்.
அந்த பாடலுக்கு பூஜா ஹெக்டே தான் நடனமாட போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது விஜய்யின் ஜனநாயகன் படத்தில் பூஜா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், ரஜினி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.