• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சோப்பு நுரையை வைத்து பனிப்பொழிவு இருப்பதுபோல் சுற்றுலா பயணிகளை ஏமாற்றிய சீனா நிர்வாகம்

சீனாவில் உள்ள சுற்றுலாதளம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பதுபோல் ஏமாற்றியுள்ளது.

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக செங்டு பனி கிராமம் திறக்கப்பட்டது. இங்கு நிலவும் பனிப்பொழிவை பார்க்க ஏராளனமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகை புரிந்தனர்.

ஆனால், அந்த இடத்தில பருத்தி மற்றும் சோப்பு நுரையை கொண்டு பனிப்பொழிவு இருப்பது போல் காட்டியுள்ளதை கண்டு ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. பின்பு தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனிப்பொழிவு இல்லாததால் இவ்வாறு செய்ததாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரியுள்ளது.
 

Leave a Reply