
ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளர் கலைவாணர்
சினிமா
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில் சாப்பிடுவதற்கு கலைவாணர் சீட்டு வாங்கி வைத்துக் கொண்டு தனது வீட்டுக்கு வருகின்ற பிச்சைக்காரர்கள், குறவர்கள் என்று எல்லாருக்கும் கொடுத்து அந்த ஹோட்டலுக்கு அவர்களைச் சாப்பிட அனுப்புவார்.
அந்த ஹோட்டல்முதலாளி, " என்னங்க! இப்படி எல்லாரையும் அனுப்பறீங்க " ன்னு கேட்டு முகம் சுளிப்பார். அதற்குக் கலைவாணர், " ஆமாம், அதுக்குத்தானே நீ ஹோட்டல் வச்சுருக்கே " என்று பட்டென்று பதிலளித்தாராம் .
கலைவாணரது டிரைவர் 25 வருஷம் தொடர்ந்து விபத்தில்லாமல் கார் ஓட்டியதற்காக சென்னை வாணி மகாலில் ஒரு விழா எடுத்தார். அப்போது டிரைவருக்கு 25 பவுனும் பண முடிப்பும் கொடுத்தார் கலைவாணர். தன்னிடம் கைகட்டி வேலைபார்க்கும் டிரைவருக்குப் பாராட்டு விழா நடத்தியது கலைவாணர் ஒருவராகத்தான் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
Chandran Veerasamy