
மாதவன் நடிக்கும் ஜி.டி நாயுடு-வின் பயோபிக் படத்திற்கு G.D.N என தலைப்பு
சினிமா
கடந்த ஆண்டு மாதவன் நடிப்பில் சைத்தான் மற்றும் ஹிசாப் பராபர் என்ற இரண்டு இந்தி திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாதவன் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் நயன் தாரா மற்றும் சித்தார்த் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் நேரடி ஓடிடி ரிலீசாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அடுத்ததாக மாதவன் திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனருடன் அதிர்ஷ்டசாலி என்ற திரைப்படத்திலும் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். மாதவனுடன் ஜெயராம், பிரியாமணி மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் வெளிநாட்டில் நடந்து முடிந்த நிலையில். அடுத்தக்கட்ட படபிடிப்பு பணி அடுத்த வாரம் கோவையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கவுள்ளார். படத்தை பற்றிய கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.