• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த ஒன்றரை மாதத்திற்குள் 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

இலங்கை

இந்த வருடத்தின் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் 13 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 9 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் பாதாளுகுழுவுடன் தொடர்புடைய 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பாதாள குழு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 30 இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது

டீ 56 ரக துப்பாக்கிகள் 3 துப்பாக்கி தோட்டாக்கள் 5 துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நிலையில் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளவர்களை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்
 

Leave a Reply