
மது போதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
இலங்கை
மது போதையில் அரச பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிகாரி முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மாணவிகள் குழுவொன்றை துன்புறுத்தியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸ் கான்ஸ்டபிளை மல்லாவி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பரிசோதனைக்காக நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர் போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
கடமையின் போது மது போதையில் இருந்தமை, போதையில் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.