• Welcome to TamilsGuide
செய்திகள் 1

4 ஆயிரம் அடி உயரத்தில் நபரின் செயல் - குவியும் பாராட்டு

கனடா

ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜோன்ஸ். 'ஸ்கை- டைவிங்' சாகசங்களில் ஈடுபடும் இவர் 4 ஆயிரம் அடி உயரத்தில் 'ஸ்கை- டைவிங்' சாகசம் செய்து காற்றில் பறந்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பாதியிலேயே வலிப்பு ஏற்பட்டு மயங்கினார். இதனால் அவர் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக தரையை நோக்கி சென்றார். இதை அவரது பயிற்சியாளரான ஷெல்டன் மெக்பார்லேன் என்பவர் கவனித்தார்.

உடனடியாக அவர் பாராசூட் ரிப் கார்டை பிடித்து இழுத்து கிறிஸ்டோபர் ஜோன்சை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார். இதன் பயனாக கிறிஸ்டோபரை காப்பாற்ற முடிந்தது.

இந்த சம்பவம் ஷெல்டன் மெக்பார்லேன் தனது ஹெல்மெட்டில் பொருத்தி இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் பயிற்சியாளரை பாராட்டி பதிவிட்டனர்.
 

Leave a Reply