• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புறக்கோட்டையில் போதைப்பொருட்களுடன் இளைஞன் கைது

இலங்கை

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில்   ஐஸ் மற்றும் கொக்கெய்ன் வகை  போதைப்பொருட்களுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நேற்று   குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த  25 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் .

கைது செய்யபட்ட சந்தேக நபரிடமிருந்து 4 கிராம் 800 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும்  43 கிராம் 600 மில்லி கிராம்  கொக்கெய்ன் போதைப்பொருள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சந்தேகநபர் பயணித்த  முச்சக்கரவண்டி ஒன்றும்  பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  சந்தேகநபர்  மேலதிக விசாரணைகளுக்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்  தொடர்பில்   புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply