• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வேலையில்லா பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டம்

இலங்கை

வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகள் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்றையதினம் 2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

அதில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply