• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென் சூடான் ஐநா அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் பயணம்

இலங்கை

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கான தெற்கு சூடான் நிலை 2 மருத்துவமனையில் கடமைகளைப் பொறுப்பேற்க இலங்கை இராணுவ மருத்துவப் படையின் 11வது இராணுவ மருத்துவக் குழு இன்று  நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது .

நாட்டிலிருந்து புறப்பட்ட 11வது இராணுவ மருத்துவப் படைக் குழுவில் 16 இராணுவ அதிகாரிகள், இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் உட்பட 64 இராணுவ வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

அந்தக் குழுவின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் ஆர்.எம்.டி.பி. ராஜபக்ஷ யுஎஸ்பீ. அவர்களும் இரண்டாவது கட்டளை அதிகாரியாக கே.டி.பி.டி.இ.ஏ. விஜேசிங்கே அவர்களும் கடமையாற்றவுள்ளனர்.

இதேவேளை இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே, தொலகே வெளியேறும் 11வது இராணுவ மருத்துவப் படையணிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இராணுவ மருத்துவப் படையணி தலைமையக நிலையத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.யு.எஸ். வனசேகர ஆர்.டபிள்யூ.பீ யுஎஸ்பீ, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறித்த குழுவினை வழியனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply