• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போலியான செய்தி குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்தல்

இலங்கை

காதலர் தினத்தன்று (14) பாடசாலைகள் பிரத்தியோக வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது என பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பான உண்மைகளை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.

கல்வி அமைச்சின் முத்திரை பதித்து, செயலாளர் கையொப்பமிட்டதாக போலியாக தயிரிக்கப்பட்ட கடிதமொன்றினூடாக, நாடு பூராகவும் இன்று (14) பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்ற போலி பிரச்சாரம் ஒன்று சமூக ஊடகங்களின் ஊடாக பரவி வருகின்றது.

இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவற்றை சமூக ஊடங்களில் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

Leave a Reply