போரை நிறுத்த புடின் ஒப்புக் கொள்வதாக டிரம்ப் அறிவிப்பு
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் பேச்சுவார்த்தை குறித்து மிக நீண்ட நேரம் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது உண்மை என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
உரையாடலின் முடிவில் பேச்சுவார்த்தையை தொடங்க புடினி் ஒப்புக்கொண்டதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் பற்றி மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு , டாலரின் சக்தி மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்து புடினுடன் பேசியதாக டிரம்ப் கூறினார்.
ஆனால் முதலில், நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டபடி, ரஷ்யா, உக்ரைனுடனான போரில் நடைபெறும் உயிரிழப்புகளை நிறுத்த விரும்புகிறோம் என்று டிரம்ப் கூறினார். நாங்கள் ஒருவருக்கொருவர் நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவது உட்பட மிக நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டோம் என்று டிரம்ப் கூறினார்.
எங்கள் குழுக்கள் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். மேலும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அழைத்து உரையாடலைப் பற்றி அவருக்குத் தெரிவிப்போம். அதை நான் இப்போது செய்வேன்.
இந்த பேச்சுவார்த்தைக் குழுவில் அமெரிக்க தரப்பில் இருந்து வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, சிஐஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்கிற்கான சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குவார்கள் என்று டிரம்ப் கூறினார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவும் டிரம்ப்-புடின் அழைப்பை உறுதிப்படுத்தினார், மேலும் உக்ரேனிய மோதல் குறித்து விவாதிக்க ரஷ்யாவில் அமெரிக்க பிரதிநிதிகளை வரவேற்க புடின் தயாராக இருப்பதாகக் கூறினார்.
புடினும் டிரம்பும் தனிப்பட்ட தொடர்புகளைத் தொடரவும் ஒப்புக்கொண்டுள்ளனர். தனிப்பட்ட சந்திப்பை ஏற்பாடு செய்வது உட்பட புடின் டிரம்பை மாஸ்கோவிற்கு அழைத்திருப்பதைக் குறிப்பிட்டார் அவர் குறிப்பிட்டார்.























