• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குரங்குகளை பிடிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

இலங்கை

தற்போது குரங்குகளை பிடிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்தா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் இந்த ஆராய்ச்சித் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது முழுமையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரணவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply