• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாரிய பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை

கனடா

கனடாவின் ரொறன்ரோவில் பாரிய பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை வேளையில் சுமார் 25 சென்றிமீற்றர் அளவில் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதைகள், சுரங்கப் பாதைகள் வழுக்கும் தன்மையுடன் கூடியதாக இருக்கும் எனவும் பயணங்களை மேற்கொள்வது சிரமமாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ரொறன்ரோவில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவு நிலைமை இன்றைய தினம் பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 
 

Leave a Reply