யாழ் ஹோட்டலில் நடந்தது என்ன? சினிமா ஹீரோ போல் ஜேர்மன் தமிழனை துாக்கி வீசி அடித்த அர்ச்சுனா எம்.பி!
இலங்கை
வைத்தியர் அர்ச்சுனா எம்.பியை வேண்டுமென்றே உசுப்பேற்றி ரணகளப்படுத்தியுள்ளார்கள் இரு புலம்பெயர் தமிழர்கள். யாழ் கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடந்த சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளின் படி சாப்பிட்டுக் கொண்டிரு்ககும் வைத்தியர் அர்ச்சுனாவிடம் வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து வைத்தியரை உசுப்பேற்றி விடும் செயற்பாடுகள் அப்பட்டமாகத் தெரிகின்றன. குறித்த சம்பவம் மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்டது என்பது போல் தோன்றுகின்றது. அர்ச்சுனாவுடன் சண்டைக்குச் சென்றவர்களை துாக்கி வீசி அர்ச்சுனா அடித்த காட்சிகள் தெளிவாகத் தெரிகின்றன. இதே வேளை அர்ச்சுனாவால் தாக்கப்பட்ட இருவரும் வைத்தியசாலையில் சென்று சிகிச்சை பெற்று வருவதாகத் தெரியவருகின்றது, அவர்களில் ஒருவருக்கு தலையில் அறுவைச்சிகிச்சை செய்யவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்த்தி தெரிவித்துள்ளார்.
வைத்தியர் அர்ச்சுனா தனது எம்.பி பதவி மற்றும் தனது வைத்தியக் கல்வித்தகமைகள் போன்றவற்றை மீறி தரக்குறைவான செயற்பாடுகளைச் செய்து வருவதாக பல்வேறுபட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் நேற்று இரவு யாழ் .கிறீன்கிறாஸ் ஹோட்டலில் நடந்த சம்பவத்தில் அர்ச்சுனாவில் தவறு இல்லை என்பது தெளிவாகின்றது.






















