• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம் - தமிழ் அரசியல்வாதிகளுக்கு உதய கம்மன்பில எச்சரிக்கை

இலங்கை

”யாழ். தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை மீது  தமிழர்கள் எவரும் கைவைக்க இடமளிக்கமாட்டோம்” என

பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன் தையிட்டி திஸ்ஸ ராஜமகா விகாரையை இடிக்க வேண்டும் என்று கூச்சலிடும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்த விடயங்களைத் தெரிவித்துக்கொள்வதாகவும் உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ ராஜமகா விகாரை சிங்கள – பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்றும்

அது அமைந்துள்ள காணியும் தற்போது விகாரை நிர்வாகத்துக்கே உரித்தானது என்றும் தெரிவித்த அவர்  இந்த விவகாரம் தொடர்பில் கதைப்பதற்குத் தமிழ் மக்களுக்கும், தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எந்த அருகதையும் கிடையாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply