• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி

இலங்கை

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB Acuity Partners நிறுவனத்தின் உரிமையை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

Acuity Partners  முன்பு HNB மற்றும்  வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது  கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது.

இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், மதிப்பை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் நிதி சேவைத் துறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.

இந்த மாற்றத்துடன், HNB Investment Bank  இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை தீர்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை வழங்கும். இந்த கையகப்படுத்தல், HNB Investment Bank இன் செயல்பாடுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி சேவைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும் HNB  எடுத்துள்ள மூலோபாய நடவடிக்கையாகும்

இலங்கையின் நிதித் துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கு இது உதவியாகும் என HNB  இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அபேவர்தன தெரிவித்துள்ளார்
 

Leave a Reply