அல்பர்ட்டா மாகாணத்தில் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி அறவீடு
கனடா
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் இலத்திரனியல் வாகனங்களுக்கு வரி அறவீடு செய்யப்பட உள்ளது.
சுமார் 200 டாலர்கள் வரியாக அளவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை முதல் இந்த வரி அறவீட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலத்திரனியல் வாகனங்களை பதிவு செய்தவர்கள் வருடாந்தம் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மாகாண வரவு செலவு திட்டத்தின் அடிப்படையில் இந்த வரி அறவீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அனைத்து வாகன சாரதிகளும் பொதுச் சேவைக்கு பங்களிப்பு செய்வதனை உறுதி செய்யும் வகையில் இந்த வரி அறவீடு செய்யப்படுவதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஹைபிரைட் வாகனங்களுக்கு இந்த வரி அறவீடு செய்யப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு எனினும் இந்த வரி அறவீட்டு நடைமுறைக்கு அல்பெர்ட்டா மாகாண இலத்திரனியல் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பையும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளனர்.





















