தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.25கோடி...
சினிமா
கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியாகி இருந்தது. அதற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து நேற்று தான் நடிகர் அஜித்தின் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
பல தடைகளை தாண்டி நடிகர் அஜித் நடித்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதனால் இந்த திரைப்படத்தை ஒரு திருவிழா போன்றே அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். நேற்று ஒருநாள் மட்டும் 5 சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்து இருந்துது. இதனால் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
இந்த நிலையில், 'விடாமுயற்சி' படம் வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.























